சீர்காழி (Sirkazhi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள
ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில்
கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில்
உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.
சீர்காழி சிதம்பரத்திற்கு அருகே உள்ள சைவத்திருத்தலம். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். தமிழிசை வேந்தர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இதுதான். தமிழ் மணக்கும் திருத்தலம் என்று சொல்லலாம்.
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.